யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (29.09.2025) வாக்குமூலம் வழங்க வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தியமை தொடர்பாக, அவர் மீது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த நாள், போக்குவரத்து பொலிஸாரால் வாகனத்தை நகர்த்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போது, அர்ச்சுனா “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என்று அவமரியாதையாக பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோட்டை நீதவான் கடந்த 25 ஆம் திகதி, அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இன்று, வாக்குமூலம் வழங்கிய பின்னர், அர்ச்சுனா கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.